உறக்கம் தழுவாது
வலைப்பூவை வலம் வர ”பரிவை” பாரதிராஜா வலைப்பூ தொடர் பதிவில் நம்மையும் சிக்கவைத்தது தெரியவர...
வலைத்தள பிரபலங்கள் எல்லாம் எழுதி முடிச்ச கேள்விக்கு அகரம் பயிலும் நான் பதில்
எழுதவா...? காந்திக்கு வந்த சோதனையேனு நினைக்க.... யப்பா...
இப்பவே கண்ணைச் செருகுதே.... காயத்ரி தூங்கிடாத.. பாவம் தூரிகையின் வாசகர்கள். ஏதோ நீ பாட்டுக்கு விசுவோட
பேசறியேனு அவுக எல்லாம் படிச்சிட்டு பயத்த வெளில காண்பிக்காம போயிட்டாங்க.. இப்ப
காந்தியோட பேசின அவ்ளோதான் புள்ள சூதனமா தூங்காம இரு.... தூங்கினாத்தான
காந்திவருவாரு கனவுல கேள்வி கேட்பாரு... நமக்கு திருவிளையாடல் தருமி மாதிரி கேள்வி
கேட்டுத்தான் பழக்கம். நாம
என்னிக்குப் பதில் சொல்லியிருக்கோம்...?
அட
ஆண்டவா...? விசுவோட
பேசிட்டிருந்த என்ன இப்படி தூங்கவிடாம தனக்குத்தானே பேசவச்சிட்டதே இந்தத்தம்பி
பரிவை பாரதிராஜா... :) பேசிக்கொண்டிருக்கும்போதே தூக்கம் கண்களைத் தழுவ.... பாவம்
காந்தி....!
காந்தி: என்னம்மா, என் கேள்வியில் இருந்து தப்பிக்க
ரொம்ப சிரமப்பட்டு முயற்சி செய்த போல இருக்கு..?
நான்: அட...வாங்க
வாங்க....அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை...(ம்ம்... ஆமான்னு சொன்னா கேள்வி கேட்காம
போயிடுவாறா...?!! :) )
1. மறுபிறவியில்
நீ எங்கு பிறக்க வேண்டும் என விரும்புகின்றாய்?
(நல்லவேளை
எதுவாகன்னு கேட்கல... ) எங்க ஊர்லதான்...
அண்ணல்.: எந்த ஊரும்மா...
நான்: நான் பிறந்த
ஊருதான்.
அண்ணல்.. முதல் கேள்வியே
இப்படியா..
2. ஒருவேளை
நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால்..?
ஹூம்... அப்படி ஒரு
கொடுப்பினை இந்த நாட்டுக்கு இருக்கா...?
அண்ணல் மைண்ட் வாய்ஸ்:
(கொடுப்பினையா, சாபமான்னு
மக்கள்தான் சொல்லனும்)
ஒண்ணும் செய்யமாட்டேன்.
அண்ணல்.: என்னம்மா
இப்புடி பட்டுனு சொல்லிட்ட...அதத்தான இப்ப உள்ளவங்க செய்யறாங்க.
நான்: அட..! எதுக்கு
இப்புடி படபடப்பாகறீங்க. அவுக செய்யறத ஒண்ணும் செய்யமாட்டேனு சொல்லவந்தேன்(அப்பா
சமாளிச்சாச்சு. ஆனா என்ன செய்வேன்னு சொல்லனுமே..!! )
கல்வித்திட்டதில
மாற்றங்கள் இல்ல கல்வித்திட்டத்தையே மாத்துவேன்.. :) (ஐ...பிள்ளைங்க ஓட்டு
எனக்குத்தான் எனக்கே எனக்குதான்)
3. இதற்கு
வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன
செய்வாய்?
என்ற நாட்டுல கொண்டுவர மாற்றத்துக்கு வெளிநாட்டவர் எதிர்ப்பு தெரிவிக்க விட்டுடுவோமா...? (வருங்கால சந்ததி பூரா எங்க
பக்கம்..:) வெளிநாட்டுல வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கனும்னா புதிய
கல்வித்திட்டத்தில படிச்சு பாஸ் செய்துட்டுதான் கேள்வி கேட்கனும்னு ஒரு வரி சேர்த்திடுவோம்ல..
4. முதியோர்களுக்கு
என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
அப்படி ஒரு திட்டம் வந்தா
முதல்ல நீங்க அதில் வருவீங்க பரவாயில்லையா...
(இந்தப்பொண்ணு
என்ன விவகாரமா தி(ச)ட்டம் போடுமோ தெரியலியே எதுக்கு வம்பு...)
அண்ணல்: அதெல்லாம் செல்லாது செல்லாது...
சரி தப்பிச்சீங்கன்னு
சொல்லி நீங்க பெருமூச்சு விடற அளவெல்லாம் எந்த திட்டமும் இல்லை. இவ்ளோ
வருடம் பிள்ளை, பேரன்,பேத்தினு கடமைய செய்து களைச்சிபோனவங்களுக்கு என்ன ஐயா திட்டம் சட்டம்
எல்லாம். இருக்கும் வரை சந்தோசமா இருந்துட்டு போகட்டும். அவுங்க சந்தோசமும் அவங்க
சுதந்திரமும் அவங்க கையில..
அண்ணல்: மைண்ட் வாய்ஸ்
(நல்லவேளை முதியோர்கள் இந்தப்பொண்ணுகிட்ட சிக்கல..)
நான்.: இப்படியே
மைண்ட்வாய்ஸ் எல்லார்க்கும் கேட்கும்படியா பேசி என்னை வில்லி அளவுக்கு
எடுத்துட்டுப்போங்க...
அண்ணல் : ஹி ஹி...
5. அரசியல்வாதிகளுக்கு
என்று புதிய திட்டம் ஏதாவது?
(இதை முதல் கேள்வியா
கேட்டிருக்கனும்.. என்னமோ போங்க இப்படியா மறதிவரும்..?)
அண்ணல்: என் நேரம்தான்
எல்லாம்.
நான்: தாத்தா உங்ககிட்ட
விளையாடாம யாருகிட்ட விளையாடுவோம்...:)
இப்ப இருக்கிற
அரசியல்வாதிங்களோ அவுக வாரிசுகளோ இன்னும் ஒரு நூறாண்டுக்கு அரசியலுக்கோ, அரசு அலுவலகப் பணிக்கோ
தகுதியற்றவராய் அறிவித்துவிடுவேன்.
அண்ணல்: அப்புடி என்னம்மா
இவ்ளோ கோவம் அரசியல்வாதிகளிடம்..
நான்: அரசியல்வாதிகளிடம்
எனக்குக் கோபமா.. ஹி ஹி இல்லையே.. நம்ம மக்களின் மீது பாசம் அதிகம் அவ்ளோதான்.
6. மதிப்பெண்கள்
தவறென மேல் நீதி மன்றங்களுக்குப் போனால்?
மதிப்பெண்கள் இடுவதே
தவறென சட்டம் இயற்றிவிடுவேன். (எப்படியும் மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை கிடையாது.
சிவாரிசு, லஞ்சம்,
ஜாதிச்சான்றிதழ்...இப்படி எத்தனையெத்தனையோ குறுக்கிடும்
அதுக்கு எதுக்கு பிள்ளைங்க படிச்சு மதிப்பெண் வாங்கி அதில் தவறென நீதிமன்றம்
போயி.....)
அண்ணல் இழுக்காதம்மா மூச்சு
நின்னுடப்போகுது..
நான்: அதுக்கென்ன காயத்ரி
கனவில் கேட்ட கேள்விகள்னு ஒரு தொடர் எழுதவச்சிடுவோம்.
அண்ணல்: நீ பதில்
சொல்லும்போதே கண்ண கட்டும்…கேள்வி கேட்டு தொடர்பதிவா வந்தா நம்ம எழுத்தாளர்களின்
நிலைமையை மனதில் கொண்டு இப்போதைக்கு உனக்கு மூச்சு நிக்கக்கூடாதுன்னு
வேண்டிக்கறேன் தாயி.
7. விஞ்ஞானிகளுக்கு
என்று ஏதும் இருக்கின்றதா?
ஒரு ஆய்வு செய்ய
ஆசைதான்... அகத்தின் அழகு முகத்தில்னு சொல்வாங்க..இப்ப அந்த முகத்தில்கூட அகம்
பிரதிபலிப்பதில்லை. முகமூடியணிந்து விடுகின்றனர். முகமூடி நீக்கி அகமறிய
அறிவியலின் உதவியை நாடுவேன்... :)
அண்ணல்.: என்ன
இந்தப்பெண்ணை கேள்வி கேட்க சொல்லி சிக்க வைத்த அந்தக் குமார என்ன செய்யலாம்...?
நான்: நம்பியார்
ரேஞ்சுக்கு யோசிக்காதீங்க...தம்பி நல்லபையன் தான் இப்புடி யோசிக்கிற அளவு நான் உங்கள
எந்தக்கேள்வியும் கேட்கவே இல்லையே இன்னிக்கு..?
8. இதை -
உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்களும் செய்வார்களா?
இதை இதைன்னு நீங்க
சொல்றது இந்திய ஆட்சியாளனா நான் கொண்டுவரும் மாற்றத்தைதானே..?
அண்ணல்: கடவுளே..!
நான்: உங்களுக்கு நம்ம
இந்தியா விட்டு மேலோகத்துக்குப்போனதும் பொறுமை கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கே
அப்படியா..?
அண்ணல்: ஏம்மா கேட்கமாட்டே... உன்னமாதிரி 40
பேர்கிட்ட கேட்ட கேள்வியவே திரும்பத் திரும்ப, திரும்பத்திரும்ப
கேட்டு அவுங்க ஒவ்வொருத்தரும் வில்லங்கமாவும், விளையாட்டாவும்
மாத்தி மாத்தி பதில் சொல்லி என்னை சுத்தவிட்ட பிறகும் உன்கிட்ட கேட்டுக்கிட்டு
பொறுமையா இருக்கிறனே என்னையப்பார்த்தா பொறுமை குறைஞ்சிருக்கு சொன்ன..?
நான்: சரி சரி விடுங்க.
நீங்க இன்னும் தெளிவாத்தான் இருக்கீங்க போல..எனக்குத்தான் இன்னும் விவரம் பத்தல.. 8 கேள்விக்கு பதில் சொல்லியும் எதிர
இருப்பவர் குழம்பாம ஒன்பதாவது கேள்வி கேட்கும் அளவு தெளிவா
இருக்கும்படி பதில் சொல்லியிருக்கேன்னா நான் இன்னும் என்னை வளர்த்துக்கனும்...
இப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டிருந்தா நான் ஆட்சிக்கு வந்து எப்படி
திட்டங்கள் செயல்படுத்துறது...? பதில் சொல்லத்தான் நேரம்
இருக்கும். :)
9. மற்ற
நாடுகளில் இல்லாத புதுமையாக?
இப்பவே நாம புதுமைதானே.. ( பக்கத்துவீட்டுக்காரன் ஏழையா இருந்தா ஏளனமா
பார்ப்போம் உதவமாட்டோம். பணக்காரனா இருந்தா பொறாமைப்படுவோம். அதே பக்கத்து
நாட்டுக்காரன் பணக்காரனா இருந்தா அன்னாந்து பார்த்து அவன் வசப்படுவோம். ஏழையா
இருந்தா இரக்கப்படுவோம். ) எட்டு கேள்விக்குப் பதில் சொல்லியும் மற்ற
நாடுகளில் இல்லாத புதுமைன்னு கேள்வி கேட்டு இருக்கீங்களே இதுவே புதுமைதான்… நான்
சொன்ன பதில்களை நிறைவேற்றினால் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாத்தான் இருக்கும்…
(விடமாட்டாறு போல இருக்கே)
10. எல்லாமே
சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச்
செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன
பிறவி வேண்டும்? - என
இறைவன் கேட்டால்..?
அது எப்படிங்க….. கேள்வி
ஒன்றாக இருந்தாலும் வேற வேற மாதிரி 40 பேரும் 40 விதமா சொல்லியிருக்க அனைவருக்கும்
நீங்க கேட்ட கேள்விமாதிரியே // எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது.
ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய்.// ஒரே
பதிலை 40 பேருக்கும் சொல்றீங்க. 40 பேரும் பாவம் செய்தவங்களா..?
பாவம்னா என்ன புண்ணியம்னா
என்ன…?
புண்ணியம் செய்யாம
இருப்பது பாவமா..
பாவம் செய்யாம இருப்பதே
புண்ணியம்தானா..? பாவம் செய்யாம இருப்பதே புண்ணியம்னா புண்ணியம் எதுக்கு தனியா
செய்யனும்.. மானிடப்பிறவிக்குத்தான் புண்ணியம் செய்யனும்னா ஒவ்வொரு பிறவிக்கும் ஒவ்வொன்றா பிறந்து புதிய அனுபவத்தை அனுபவிக்க எண்ணி பாவத்தை மட்டும் செய்யலாமா..?
அண்ணல்: நிறுத்துமா
நிறுத்துமா…? ஏம்மா இப்புடி…
அய்யோ நான் இன்னும் கேட்க
நினைச்சத கேட்டு முடிக்கவே இல்லை..
அண்ணல் அதெல்லாம் நீ
முடிக்கவேண்டாம்.. பாரு..உன் பதிவை படிக்கவந்தவங்க முடிக்கும் முன்பே ஓடுறதை… சரி
உனக்கு என்ன பிறவி வேண்டும் சொல்.
மானிடப்பிறவி
கொடுக்கமுடியாதுன்னா அதை உருவாக்கும் பிரம்மாவோட பிறவி கொடுத்திடுங்க போதும். எங்க நாட்டுக்கு ஏற்றார்போல நாங்களே டிசைன்
செய்துக்கறோம்.
அண்ணல் :
மறைந்துவிடுகிறார்.
நான் : நான் தான்
பிரம்மா, நான் தான் பிரம்மா…
குமார்: இப்படியே சொல்லி
காந்தித் தாத்தாவ ஓட வச்சிட்டீங்க. அடுத்தது பிரம்மாவா…??!! பாவம் பிரம்மா…J
குறிப்பு: பிரபலங்கள் எல்லாம் எழுதின தொடர்பதிவுக்கு என்னையும் எழுத அழைப்பு விடுத்த தம்பி ”பரிவை” குமாரருக்கும் இத்துனை நேரம் பொறுமையாக படித்து வழக்கம்போலவே என்னை வாழ்த்தி எழுத ஊக்கமளிக்கும் அனைவருக்கும் அன்புகலந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.
நீங்கதான் பிரம்மா...
ReplyDeleteஅழைப்பை ஏற்று அருமையாய் எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.
சிரிப்போடு சிந்தனையும் அவ்வப்போது விசுவும் வந்து கலக்கலான பகிர்வாய் அமைந்திருக்கிறது.
மிக்க நன்றி தம்பி... எம்மை எழுத அழைத்தமைக்கும். :)
Deleteநல்ல பதில்களுடன் இனிய பதிவு!.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி... :) தங்கள் வாழ்த்துகள் எம் எழுத்துகளை மெருகேற்றட்டும். :)
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
மிக அருமையாக கலக்கு கலக்கி விட்டீர்கள் பகிர்வுக்கு நன்றி
த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோ.. :) மிக்க நன்றி.
Deleteசகோதரிக்கு கில்லர்ஜியின் வணக்கம் உண்மைலேயே உங்களோட பேசியதில் காந்திஜி மண்டையை பிச்சுக்கிட்டு (ஏற்கனவே ஒண்ணுமில்லை) ஒடியிருப்பாரு,,, அனைத்தும் அருமை ஐந்தாவது கேள்விக்கு சொன்னீங்க பாருங்க ஸூப்பர் (இப்ப இருக்கிற அரசியல்வாதிங்களோ அவுக வாரிசுகளோ இன்னும் ஒரு நூறாண்டுக்கு அரசியலுக்கோ, அரசு அலுவலகப் பணிக்கோ தகுதியற்றவராய் அறிவித்துவிடுவேன்) வாழ்த்துகள் காந்திஜியிடம் நான் சொன்ன, பதில்களையும் கேட்க அழைக்கிறேன்
ReplyDeleteஇதோ இணைப்பு.
http://killergee.blogspot.ae/2014/11/1.html
சகோதரரின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. அனைவரது சிந்தனைகளும் சிறகடிக்கத் தாங்கள் துவக்கிவைத்தப் பதிவு சிறப்பு. வாழ்த்துகள்.. :)
Deleteஅவுங்க சந்தோசமும் அவங்க சுதந்திரமும் அவங்க கையில.. //
ReplyDeleteமுதியோர் பற்றி சொன்னது அருமை.
வாங்க ...மிக்க நன்றி..
Deleteநகைச்சுவையாக இருந்தாலும் உண்மைகள்...
ReplyDeleteவாங்க சகோ..மிக்க நன்றி..:)
Deleteபாவம் காந்தி தாத்தா அவரையும் குழப்பிட்டீங்களே ...
ReplyDeleteநகைக்கு எதற்க்கு அலங்காரம் என்பதை போன்றே எழுத்து நடை அருமை சகோ....
வாங்க சகோ... நன்றி சகோ.. சித்தனின் சிந்தனையோடு சிறப்பாக கவிபுனையும் சகோ பித்தனைப்போல் கிறுக்கியதைக் கண்டு ரசித்தமைக்கு மகிழ்ச்சி..:)
Delete