மூச்சையடக்கி கல்விக்கடலில் மூழ்கியே
அறிவுமுத்தை அள்ளியெடுக்க
விழைந்திடும் குழந்தைகளுக்கு வழங்கிடாது...
வணிக உலகிலே
அதிகவிலைகொடுக்கும் வணிகருக்கே
அள்ளிவழங்கி...
வாழ்க்கையை வணிகமாக்கும்
கல்வித்தந்தையில்லா..
புதியதோர் உலகையமைப்போம்...!!
மனிதம் துறந்து,
உணர்வுகள் மரத்து
மனிதனை மனிதன் கொன்றே
முன்னேற விரும்பிடாத
புதியதோர் உலகையமைப்போம்...!!
இறைக்கு நிகராம்
மருத்துவருமே
மனம் நெகிழ்ந்து
யாவர்க்கும் சமமான மருத்துவமளித்து
மனிதம் போற்றிடும் மகத்தான
புதியதோர் உலகையமைப்போம்...!!
பிரபஞ்சத்தின் புனிதமாம்
தாய்மை மதித்து..
பெற்றோரை வணங்கி பேணிக்காத்தே
காப்பகமில்லா...
புதியதோர் உலகையமைப்போம்...!!
இயற்கையைப் போற்றிப்பாதுகாத்திடும்
மனங்கள் நிறைந்த
புதியதோர் உலகையமைப்போம்...!!
வாழ்க்கைத்தோட்டத்தில்
அன்பு,பாசம், மனிதமெனும்
அரியமலர்கள் அனைத்தும்
நறுமணம் வீசிடச்செய்யும்
புதியதோர் உலகையமைத்திடவே
தொடரும் எம் பயணத்தில்
இணைந்தே பயணிக்க
இன்முகத்துடன் அழைக்கின்றேன்...
இணைந்த கரங்களுடனே
இன்னல்களை எதிர்கொள்வோம்..
எங்கும் மகிழ்ப்பூ மலரச்செய்யும்
புதியதோர் உலகையமைப்போம்...!!
அருமையான பதிவு இணைகிறேன் உன்னுடன் என்றுமெ ஒரு புதிய சகாப்தம் படைக்க !!!
ReplyDeleteமகிழ்ச்சி அண்ணா...வருகைக்கும், கருத்திற்கும். :)
Deleteஅருமை
ReplyDeleteமகிழ்ச்சி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும். :)
Deleteஅருமை
ReplyDeleteநன்றி...:)
Deleteஅருமை
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஎன்ன செய்வது ஆதங்கம் புரிகிறது...
எல்லாம் உணவுச்சங்கிலி வாழ்க்கையாகிவிட்டது போல் அமைவு....நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ. ஆம் உண்மைதான். :)
Deleteஅருமையான கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி தோழமையே..:)
Deleteஅழகாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteமுனைவரின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும். :)
Delete