நேற்று(06.03.14) தில்லி தமிழ்ச்சங்கத்தில் ”விடியல் பார்வையற்றோர் இசைக்குழு” நடத்திய மெல்லிசை நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. திருச்சியைச் சார்ந்த விடியல் இசைக்குழுமத்தில் அனைவரும் பார்வையற்றவர்கள். சகோதரர் வரதராசன் தமிழ் பட்டதாரி.(பி.ஏ.,பி.எட்., ). ”சாகும் வரை தமிழ் படித்து சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்...” என்ற வாசகத்தைக்கொண்டுள்ளது இவர்களது முகப்பு பேனர். மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும் பார்வை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து வருகின்றனர் இந்த குழுவினர். சகோதரர் வரதராஜனின் தமிழ்ப்பற்றும், அவரது குரல்வளமும் வியக்கவைக்கிறது. பார்வையில்லை என்ற எண்ணம் இருப்பதாகவேத் தெரியாமல் மிகவும் தன்னம்பிக்கையுடன் இவர்கள் நிகழ்ச்சி இருந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது. பெரிய பெரிய இன்னிசைக்குழுவினரின் தேதிகள் கிடைக்கக் காத்திருக்கும் பலர் இவர்களின் இசைக்குழுவையும் நாடிப்பார்க்கலாமே..! பிரபலமான பாடகர்களும் தன் நிகழ்ச்சியில் தமக்கு முன்னே இருக்கும் பாட்டுப்புத்தகம் வைத்து பார்த்துப்பார்த்துப் பாடுவார்கள். இவர்கள் தங்கள் மனப்புத்தகத்தில் இருக்கும் வரிகளை அகக்கண்களால் பார்த்துப் பாடுகின்றனர்.
குழுவில் இருக்கும் அனைவரது குரல் வளமும் வரமாகவேத் தோன்றுகிறது. சகோதரிகள் அருணா மற்றும் காந்திமதி அவர்களின் குரல்வளம், வழங்கியவிதம் அனைத்தும் அருமை என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்தக்கூடியதல்ல. சகோதரி அருணா பாடிய முகுந்தா முகுந்தா பாடலில் அவர் குரல்மாற்றிப் பாடியவிதம் மனதைக்கவர்ந்தது.
சகோதரர் வரதராஜன் “காதோடுதான் நான் பேசுவேன் என்ற பாடலை” பெண் குரலில் பாடியபொழுது பாராட்ட வார்த்தைகளற்று பிரமிக்கவே முடிந்தது. மனம்நெகிழ்ந்து வரும் கண்ணீர்முத்துக்களை உணர்வு இழையில் மாலையாக்கி பாராட்டுகிறேன்.
நிகழ்ச்சிகளுக்கிடையில் சகோதரர் வழங்கிய ஒரு செய்தி..”பார்வையற்றவர்களை சமீபகாலமாக மாற்றுத்திறனாளிகள் என அழைக்கின்றனர். மாற்றுத்திறன் என்பது பார்வையற்ற என்ற பொருளை கொடுக்காது. எனவே பார்வையற்றவர்கள் என்று கூறுவது தவறாகாது...அப்படி அழைக்க சங்கடப்படவேண்டாம்” என்றுகூறினார். இப்படிப்பட்ட ஒரு நிகழ்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தில்லி தமிழ்சங்கத்தை பாராட்டுவதோடு விடியல் இசைக்குழுவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, என்றும் இளமையானவளாம் தமிழன்னையைப்போல் இவர்களும் என்றும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியும், வெற்றியும் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் வழங்கவேண்டுமென வேண்டி வாழ்த்துகிறேன்.
என்றும் அவர்கள் சிறக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோ...நம் அனைவரின் வாழ்த்தும் அவர்களின் வாழ்வை வளமாக்கட்டும்..:)
Deleteநானும் வாழ்த்திக்குறேன்.
ReplyDeleteமிக்க நன்றி..._/\_ தங்களின் வாழ்த்து அவர்களுக்கு விடியலாய் அமையட்டும்..:)
Deleteவிடியல் இசைக்குழுவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, என்றும் இளமையானவளாம் தமிழன்னையைப்போல் இவர்களும் என்றும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியும், வெற்றியும் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் வழங்கவேண்டுமென வேண்டி வாழ்த்துகிறேன்.
ReplyDeleteநாங்களும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்
ரசித்ததை ரசனையுடம் பதிவிட்டமைக்கும்
தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாங்க..மிக்க நன்றி..தங்களது வாழ்த்தும், தொடர்ந்த ஊக்கமும் மகிழ்ச்சியளிக்கிறது..:)
Deletetha.ma 4
ReplyDelete_/\_
Deleteஇனிய பதிவு!.. மனம்நெகிழ்கின்றது.
ReplyDeleteசர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!..
வாங்க மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் தோழர்..:)
Deleteஅட நீங்களும் அன்று அங்கே வந்திருந்தீர்களா?.... நானும் வந்திருந்தேன். இன்று தான் அந்நிகழ்ச்சி பற்றிய பதிவினை எனது தளத்தில் வெளியிட்டேன்.
ReplyDeleteசிறப்பான நிகழ்ச்சி....
வணக்கம் வாங்க..மிக்க மகிழ்ச்சி..:)
Delete