முகப்பு...

Saturday 27 August 2011

திருமணம்.....


இருமனம் இணையுமாம்..
திருமணத்தில் கூறுகிறார்கள்.

திருமண பந்தத்தில்...
ஆண்
தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகக்
கூறினால்  அது "விருப்பம்"
அதுவே,
பெண் கூறினால் "வாயாடி"

ஆண்
தன் உடையலங்காரம் மாற்றிக்கொண்டால்
"நாகரீகம்"
பெண் மாற்றிக்கொண்டால்
"அடக்கமின்மை"

ஆண்

தன் புகுந்த வீட்டில் ஒட்டாமல் விலகி இருந்தால்
"கூச்ச சுபாவம்"
பெண் விலகி இருந்தால்
"குடும்பத்தில் ஒட்டாதவள்" 

தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால்
பெண்ணுக்கு கிடைக்கும் பட்டம் "மலடி"

இருமனம் பிரிந்து தனி மனமானால்
பெண்ணுக்கு கிடைப்பது "வாழாவெட்டி"
என்ற பெயர்.

ஆணுக்கு முன்னால்
பெண் இறந்து விட்டால்
பெண்ணுக்கு கிடைக்கும் பரிசு "சுமங்கலி"

பெண்ணுக்கு முன்னால்

ஆண் இறந்து விட்டால்
அங்கேயும்
பெண்ணுக்குத்தான் பரிசு..."கைம்பெண்"

ஆரண்யத்தில் ராமனும்தானே தனித்திருந்தான்?
சீதை அசோகவனத்தில் இருக்கும்போது...
”அக்னிபரீட்சை” என்னவோ  சீதைக்கு மட்டும்.

சூதாடியதென்னவோ தருமர்தான்,

”அவமானமும் தண்டனையும்” திரௌபதிக்கு.

இப்படி இருமனம் இணையும்,
திருமண வாழ்வில்,
அனைத்து
"பரிசை"யும் பெண்ணுக்கே வழங்கி 

மகிழ்வித்துப் பார்க்கும்
விந்தையானது நம் சமூகம் !!!!!!!!

   

2 comments:

  1. உண்மைதான் என்ன செய்வது அந்த சமுதாய மாற்றம் இன்னும் வரவில்லை பெண்ணுக்கு பெயர் தான் தாசி, வேசி என்ற பட்டம் ஆனால் அவளை நாடிச்செல்லும் ஆணுக்கு என்ன பட்டம் ? தாசியும் வேசியும் மற்றவர்களால் தீண்டபடாதவர்களா என்ன ? அற்ப சந்தோஷத்திற்காக அனுபவித்து விட்டு செல்பவர்களை என்ன என்று கூறுவது ? தன் சுயநலதிற்காக பெண் வெறி பிடித்து அலைபவர்களை என்ன செய்வது ? பாவம் சில பெண்கள் வறுமையின் காரணமாக இவ்வாறு மாறி விடுகின்றனர் இதுவே பல ஆண்களுக்கு சாதகமாக இருக்கிறது இந்த கொடுமை மாறுமா ? பணக்காரன் மகன் ஒரு ஏழை பெண்ணை கெடுந்தான் என்றால் அது பணத்தாலோ இல்லை ஆள் பலத்தாலோ அமுக்கபடுகிறது ? பாவம் அந்த பெண்ணின் நிலை என்ன ?

    ReplyDelete
  2. வணக்கம் சகோ.சங்கர்...தங்கள் ஆதங்கம் மிகவும் சரியே...என்ன செய்வது? மாற்றத்தை விரைவில் எதிர்பார்ப்போம்..உருவாக்குவோம்..தங்கள் கருத்துக்கு நன்றி...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__