முகப்பு...

Wednesday 17 August 2011

மகனுக்கு இரங்கல்.....



மகனே,
கருவில் பத்து மாதம்
இருக்க வேண்டிய நீ,
எட்டு மாதத்தில் எட்டிப்பார்த்தது....
எமனிடம் செல்வதற்குதானா ??


உன் இறப்பைக்கூட அறியாமல்,
இறுமாப்புடன் இருந்த என்னை...
பெற்றெடுத்த உனக்குப்
பால் புகட்ட முடியாத பாவியாக்கிச் சென்றாயே!

குதூகலமாய் உன்னுடன்
தாய்வீடு செல்லவேண்டிய என்னைத் ,
தனியாக செல்லவிட்டாயே!!

என் தவிப்பரியாதவர்கள்,
உன்னைப்பற்றி துக்கம் விசாரிக்க,
விவரமறியாத...
என்னை விழி பிதுங்க வைத்தாயே!



உன் பிறந்ததினத்தைக் கொண்டாட வேண்டியவளிடம்
உன் பிணத்தையல்லவா கொடுத்து
உன் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கச் சொன்னார்கள்..

உன் சவத்தைக் கண்டு,
கண்ணீர் விடக்கூடத் தோன்றாமல்
சித்தம் கலங்கி சிலையாய்  நின்றேனே!!



நீ
விளையாடி மகிழவேண்டிய,
உன் பாட்டன் வீட்டிலேயே,
உன்னை மண்போட்டு புதைத்தார்களே!

சடங்கு முடித்து,
சந்தோசத்தை இழந்து...
செய்வதறியாது சித்தம்
கலங்க வைத்தாயே!!!

யார் அழுதாலும்,
நீ
அழுவதாய் உணர்ந்து
பாலூட்ட நினைத்து, வீங்கிய மார்பில்..
வீணாகிப் போகும் பாலை
வீசி எரிந்து பாவம் செய்து,

விடியும் வரை விழித்திருந்து...
விழி சிந்திய கண்ணீரை யாரறிவார்?


பிள்ளையில்லாத் தொட்டிலை ஆட்டி
பாழும் அறைக் காத்தப் பாவியானேன்!!

கணவனிடம் கனிவை எதிர்பார்த்துச்
சென்ற என்னைக் கடிந்து,
பிள்ளையின் இறப்புக்குப் பெற்றவளே
காரணம் என்றவனிடம்.,


சொல்வதறியாது..
துக்கங்களை விழுங்கி,
உள்ளத்தை உரமாக்கி,
முகத்தில்  புன்னகைப் பூட்டி...
இன்று வரை நடித்து வருகிறேன்.,
அரிதாரம் பூசாமல்.,

நீ 
காணாத உன் உடன்பிறப்பிற்காக...
















8 comments:

  1. சுமந்தவளுக்கு தெரியும் பாரம் !!! அழிந்து விட்டதை மீண்டும் அடைய முடியுமா !!! மனதை தேற்றிக்கொண்டு மாற்று வழியில் கவனம் செலுத்த வெண்டியதுதான்..... அருமையான வரிகள் !!! நெஞ்சம் கனக்கிறது தாய்மையின் ப்ரதிபலிப்பு தத்ரூபமாய் மிளிர்கிறது

    ReplyDelete
  2. அருமை அக்கா, பெற்ற மனம் பித்து

    ReplyDelete
  3. arumai enadhanbu kayathri..... vaazhththukkal... manam urugiyadhu...kangal kasindhadhu.... kavidhai padiththu mudikkum munbu.....

    ReplyDelete
  4. //சுமந்தவளுக்கு தெரியும் பாரம் !!! அழிந்து விட்டதை மீண்டும் அடைய முடியுமா !!!//

    உண்மைதான் சகோ.சங்கர். இழந்ததற்கு இணையாக வேறு கிடைத்தாலும், இழப்பு இழப்புதான்...இதயத்தில் முள்ளாக அவ்வப்பொழுது தைக்கத்தானே செய்யும்...தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..தொடர்ந்து ஊக்கமளிக்கவும்..

    ReplyDelete
  5. Anonymous...தங்கள் கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  6. ஆம் கலைத்தம்பி..பெற்ற மனம் பித்து...பிள்ளை மண்ணானதால்...

    ReplyDelete
  7. mekavum arumai .manathai thodum kavithai.

    ReplyDelete
  8. உங்கள் வருகைக்கு நன்றி மலர்...தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வழங்கி வரவும்...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__