முகப்பு...

Wednesday 25 July 2012

”100” வது பதிவு....


என்னை கவிதையுலகிற்கு கரம் பிடித்து அழைத்து  வந்து எனக்கு கரம் கற்பித்து  என் சிந்தனைகள் சிறகடித்து  நான் சிகரத்தை அடையவேண்டும் என உறுதுணையாக இன்றுவரை இருந்து வரும் என் ஆசானுக்கு என் மனமார்ந்த நன்றியினையும் வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.


என்னை இவ்வழி பயணிக்கப் பணித்த இறையையும், என்னுடைய எழுத்துக்கும், எண்ணத்திற்கும் உடனிருந்து ஆசி வழங்கிவரும் கலைமகளையும்  பாதம் பணிந்து வணங்குகிறேன்.  

என் வலைப்பூ  வாசகர்களுக்கும்என்னுடைய எழுத்தின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டி என் எழுத்துக்களை மெருகேற்றிக்கொள்ள துணைபுரிந்து எனை ஊக்குவித்து வரும் என் தோழமைகளுக்கும் மற்றும் நான் எழுத உறுதுணையாக இருந்து வரும் என்  குடும்பத்தாருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்..என் எழுத்தை செம்மை படுத்திக்கொள்ள தங்களது தொடர்ந்த ஆதரவை  வேண்டி..இப்பதிவினை தொடருகிறேன்.....
******************************************************************************************************************************************************************************************

ஆன்ம ராகம்...!!


மனமும்புத்தியும் குவியும் 

இடத்தில் மௌனம் பிறக்க..
ஆன்மாக்களின் புணர்வில் உதிக்கிறது காதல்….!! 

சொர்க்கத்தைப் புவியில் கொணர்ந்து
எனை உயிர்ப்புடன் வைத்திருக்கும்
ஓசையில்லாமல் அவனிட்ட முத்தம்....

அம்புலியையும்ஆதவனையும் சந்திக்கவைத்த
மனதோடான அவன் பேச்சு ...
கண்ணிமைக்க மறந்த எனை
இசையாய் குளிர்விக்க......

மௌனம் மௌனமாய்
மௌனத்தைத் துறந்து
மெய்சிலிர்க்க வைத்த காதல்...

அவன் கண்ணோக்கிய
என் விழிகள் மண் நோக்க..

மேனிபரவிய விரல்கள்
மென் தேகத்தை வீணையாய்மீட்ட
ஆன்மராகத்தின் அன்புணர்த்த...
என் மனதின் நரம்புகள்
அறுபடுகின்றன
உணர்ச்சி வெள்ளத்தில்....!!!

அகத்திலும்அங்கத்திலும் இடமளித்து
அர்த்தநாரீசுவரருமாகி...
இன்பக்கடலில் ஆழ்த்தியவன்
இசைக்கும் ஆன்ம ராகத்தில் மூழ்க ..
இன்னுமோர் சொர்க்கத்திற்காக ஏக்கமுடன் காத்திருக்கிறேன்... !!!

















12 comments:

  1. முதலில் 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா.

    ஆன்ம ராகம் காதலை உணர்த்தும் அற்புத ராகமாக வந்திருக்கிறது. அருமையான கவிதை...

    வரிக்குவரி அருமையான வார்த்தைகள்...

    100 பதிவுகள் லட்சம் பதிவுகளாகட்டும் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. @சே.குமார்...தம்பியின் வாழ்த்து மகிழ்ச்சியளிக்கிறது.. மிக்க நன்றி...அந்தக் கலைமகள் அருளினால் உன் வாழ்த்து பலிக்கட்டும்..

      Delete
  2. வாழ்த்துக்கள் சகோதரி...

    இவ்வளவு தானா ? உங்களின் முந்தைய பதிவை பாருங்க...

    ReplyDelete
    Replies
    1. @திண்டுக்கல் தனபாலன்...தோழமையின் வரவிற்கு மகிழ்ச்சி..

      Delete
  3. Replies
    1. @கவிதை வீதி...வாழ்த்தியமைக்கு நன்றி...:)

      Delete
  4. அழகான யோசனை... மிகவும் நேர்த்தியான எழுத்து வடிவம்... வாழ்த்துக்கள் :) :)

    ReplyDelete
    Replies
    1. @Shanthi Sridhar, வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி...:)

      Delete
  5. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி...:):)

      Delete
  6. மிக்க மகிழ்ச்சி தோழரே...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__