முகப்பு...

Thursday, 16 June 2011

"வாழ்த்துரை”


வேழ முகம் தாங்கி வீற்றிருப்போனே..! 
வேலன் துணைத் தாங்கி வாழ்வளித்தோனே..!

வால்மீகி வரலாறு படைக்க வண்ணமாய்
வந்தமர்ந்து எண்ணமாய் உதித்தோனே.

முன்னைவினை யாவும் வென்று முடித்தோனே..!
அன்னைத் தமிழுக்கு அழகு செய்தோனே..!
காலனை வென்ற வேலன் நின்ற
திசைபார்த்து வணங்கிப் பணிகிறேன்.

சத்தியும் சிவனுமாய் சத்தியம் பேசுகிறேன்
சங்கத் தமிழ் மூன்றும் சந்தமாய் வீசுகிறேன்
சொந்தத் தமிழினிலே பாசுரங்கள் பாடுகிறேன்
வங்கக் கடலினிலே வாரணன் போற்றுகிறேன்.

வளரும் பிறையாக வளரட்டும் தமிழ்
மலரும் மலராக மலரட்டும் அகம்
சூரியச் சுடரொளி மதியென வீசட்டும்
சுத்தத் தமிழால் பாரெங்கும் பேசட்டும்

மடைதிறந்த வெள்ளமாய் இன்று
மனம் திறக்கும் மயில் ஒன்று
வண்ணங்கள் காட்டி தன் எண்ணங்கள்
எழுதவரும் வேலை இது, - வாழ்த்துரைத்து

வரவேற்கிறேன் வடிவேலன் அருள் பெருக
வந்தமர்ந்த கணபதி தாள் பணிந்து
வருக..! வருக...!! வளர்க நாளும் தமிழில்
வாழ்த்துகிறேன் வளம் பெறுக.


என்றும் அன்புடன்,
-தமிழ்க்காதலன்.

3 comments:

 1. கணபதியின் அருளுடன் வாழ்த்துரை வழங்கிய தமிழுக்கு நன்றி...
  உங்கள் ஊக்கம் என்றும் தொடர வேண்டுகிறேன் ...

  ReplyDelete
 2. இந்த தூரிகைச் சிதறலுக்கு முத்தாய்ப்பாய் முதல் பதிப்பு தமிழ்த்தாயின் ஆசிபெற்ற தமிழின் வாழ்த்துரையாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்....நன்றி....

  ReplyDelete
 3. இறை உங்களைக் காத்தருளும். தமிழ்த்தாய் உங்களின் படைப்புகளுக்காய் காத்திருக்கிறாள். இன்னமுத இலக்கிய விருந்துக்கு அழையுங்கள். அமுதமெனத் தமிழை அள்ளிப் பருகுங்கள். வாழ்த்துகள். கவிக்காயத்ரிக்கு........ மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__