முகப்பு...

Thursday 11 February 2016

தமிழ்க்குடில் அறக்கட்டளை - கவிதைப்போட்டி முடிவுகள்

அன்புள்ளங்களுக்கு,
தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகியின் அன்பு வணக்கம்.
மகாகவி பாரதியின் பிறந்ததின கவிதைப்போட்டி பரிசு பெற்றவர்கள் விவரம்
டிசம்பர் மாதம்’2015 மகாகவி பாரதியாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய கவிதைப் போட்டியின் முடிவுகளை தங்களிடம் பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.
போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றிபெற்றவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை நடுவர்கள் சார்பாகவும், நிர்வாகத்தின் சார்பாகவும், நம் தமிழ்க்குடில் அங்கத்தினர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
போட்டிகளின் வெற்றியாளர்களைத் தேர்வு செய்த நடுவர்களைப்பற்றி தங்களுக்காக சிலவரிகள்.
கலைமகள் ஆசிரியர் உயர்திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு. முத்துவேல் அவர்கள் இருவரும் தங்களது சமூகப்பணி மற்றும் தமிழ்ப்பணிகளுக்கிடையில் நம் தமிழ்க்குடிலின் வேண்டுகோளை ஏற்று சிறந்த பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்து கொடுத்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றியினை நிர்வாகம் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்த நம் பயணத்தில் தங்களது தொடர்ந்த ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டுகிறோம்.
கவிதைப்போட்டிமுதல் பரிசு : திரு. கருமலைத்தமிழாழன், ஓசூர்.
தலைப்பு : கனவை நனவாக்குவோம்.
இரண்டாம் பரிசு : திரு. ந. ஜெயபாலன், திருநெல்வேலிதலைப்பு : மனிதம் மலர்ந்த்து.
மூன்றாம் பரிசு : நாகினி, மதுரைதலைப்பு : முயற்சி எனும் கவின்
போட்டியில் பங்குகொண்டவர்களுக்கும், வெற்றிபெற்றவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.
குறிப்பு: அன்னையர் தின கட்டுரைப்போட்டி மற்றும் மறைமலை அடிகள் சொற்பொழிவு போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டுவிட்ட்து என்பதையும், திரு காமராஜர் பிறந்ததின கட்டுரைப்போட்டி மற்றும் மகாகவியின் பிறந்ததின கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு விவரம் விரைவில் தெரியப்படுத்தவிருக்கிறோம். நன்றி
என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில் smile emoticon smile emoticon ___//||\\___

Wednesday 3 February 2016

தமிழ்க்குடில் அறக்கட்டளை - மறைமலையடிகளார் சொற்பொழிவு போட்டி பரிசளிப்பு

அன்புள்ளங்களுக்கு,
மகிழ்ச்சியுரை” - சொற்பொழிவுப்போட்டி பரிசளிப்பு.

தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகியின் அன்பு வணக்கம்.
smile emotico
  

மறை. திரு. தாயுமானவன் அவர்கள் எழுதிய மறைமலை அடிகளாரின் பன்முகப்பார்வை நூல் திறனாய்வு விழா 2016 பிப்ரவரி மாதம் 2ந்தேதி சென்னை எஸ்பிளனேடு YMCA அரங்கத்தில் நிகழ்ந்தது. திருமதி. விமலா மறைக்காடன் அவர்கள் தலைமை தாங்க பேராசிரியர் வாணி அறிவாளன் அவர்கள் நூல் திறனாய்வு செய்து உரையாற்றினார். உயர்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள் வரவேற்புரையாற்ற மறை தாயுமானவன் அவர்கள் ஏற்புரையாற்ற எளிமையாகவும் மிகச்சிறப்பாகவும் நிகழ்ந்தது விழா.
விழா மேடையில், ஜூலை மாதம்’2015 மறைமலையடிகளாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய சொற்பொழிவு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வெற்றியாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
அடிகளார் பற்றிய சொற்பொழிவு போட்டிக்கு அவரது பேரன் மறை. திரு. தாயுமானவன் அவர்கள் நடுவராக இருந்து சிறந்த படைப்பினைத் தேர்வு செய்து வழங்கினார். அடிகளாரின் நூல் திறனாய்வு விழாவில் போட்டிக்கான பரிசு வழங்கியது வெற்றியாளர்களுக்கு மட்டுமின்றி நம் தமிழ்க்குடிலுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே. நூல் திறனாய்வு விழா மேடையில் நம் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பரிசளிப்பையும் நடத்திக்கொடுத்த மறை திரு. தாயுமானவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விழாவில் வரவேற்புரையாற்றி, விழாவினைத் தொகுத்து வழங்கிய உயர்திரு மறைமலை இலக்குவனார் அவர்கள் நம் தமிழ்க்குடிலை அறிஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவும் செய்தார். நம் தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடும் நம் நிர்வாகத்தின் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் அற்புத மனிதர். தம் அனுபவக்கடலில், முத்துக்களாய் அவர் கண்டெடுத்த அறிஞர்களை நமக்கு அறிமுகப்படுத்தி தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஐயா Maraimalai Ilakkuvanarஅவர்களுக்கு தமிழ்க்குடில் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மறைமலையடிகளார் சொற்பொழிவு போட்டி
முதல் பரிசு ஸ்டெல்லா தமிழரசி ர. - சென்னை
இரண்டாம் பரிசு ஸ்ரீ வித்யா - சென்னை
தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நன்றி.
என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில். :)
smile emoticon